நீர்கொழும்பில் நேற்றிரவு முஸ்லிம்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நிலையில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 7 மணியுடன் நீக்கப்பட்டுள்ள அதேவேளை சமூக வலைத்தள பாவனைக்குத் தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வன்முறைகள் பற்றிய தகவல்கள் பரவுவதைத் தடுக்க இவ்வாறு தற்காலிக தடை அமுல்படுத்தப்படுவதாக அரசாங்கம் விளக்கமளித்து வருகிறது.
ஈஸ்டர் தாக்குதல்களையடுத்தும் இவ்வாறு தடை அறிவிக்கப்பட்டிருந்த அதேவேளை, நேற்றைய தாக்குதல் சம்பவத்தையடுத்து பேஸ்புக், யுடியுப் மற்றும் வட்ஸ்அப் பாவனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment