சிலுவை பொறிக்கப்பட்ட வெசக் கூடுகளால் சர்ச்சை: பொலிஸ் தலையீடு! - sonakar.com

Post Top Ad

Saturday 18 May 2019

சிலுவை பொறிக்கப்பட்ட வெசக் கூடுகளால் சர்ச்சை: பொலிஸ் தலையீடு!



சாலியவெவ பகுதியில் கிறிஸ்தவ-பௌத்த இளைஞர்கள் ஒன்றிணைந்து கடந்த இரு வாரங்களாக சிரமப்பட்டு தயாரித்த வெசக் கூடுகளை காட்சிப்படுத்த விடாது பிரதேசத்தில் சர்ச்சை உருவாகியுள்ளது.



குறித்த வெசக் கூடுகளில் ஒரு பக்கம் பௌத்த சக்கரமும் மறு பக்கம் சிலுவைகளும் பொறிக்கப்பட்டிருந்தமையே இதற்கான காரணம் என அறியமுடிகிறது.

அளுத்கம ஸ்ரீ லும்பின் விகாராதிபதியின் தலைமையிலான குழுவினரே எதிர்ப்பு போராட்த்தினை நடாத்தியுள்ளமையும் இதனையடுத்து அங்கு விரைந்த பொலிசார் வெசக்கூடுகளை காட்சிப்படுத்த முடியாது என 'தீர்ப்பளித்த'தன் பின்னணியில் சுமார் 500 வெசக் கூடுகள் விரயமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment