புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு கல்குடா முஸ்லிம் பகுதிகளில் பட்டாசு கொளுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் கல்குடா உலமா சபை தடை விதித்துள்ளது.
அத்தோடு வியாபாரிகள் தங்களுடைய வர்த்தக நிலையங்களில் பட்டாசுகளை கொள்வனவு செய்வதையும் விற்பனை செய்வதையும் நிறுத்திக் கொள்ளுமாறு உலமா சபை அனைத்து வர்த்தகர்களுக்கும் அறிவித்துள்ளது.
பட்டாசுகளை வெடிக்க வைத்து வீண்விரயங்களில் ஈடுபடாமல் நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்க முன்வருமாறு கல்குடா உலமா சபை பொதுமக்களிடம் வேண்டிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment