சிரியாவில் பயிற்சி பெற்று திரும்பிய தெஹிவளை தாக்குதல்தாரி - sonakar.com

Post Top Ad

Sunday, 5 May 2019

சிரியாவில் பயிற்சி பெற்று திரும்பிய தெஹிவளை தாக்குதல்தாரி


கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தாக்குதல் நடாத்தச் சென்று, பின்னர் மனக்குழப்பத்துடன் தெஹிவளை சென்று, பல மணி நேர குழப்ப சூழ்நிலையின் பின் அருகிலிருந்த ட்ரொபிக்கல் இன்னுக்குள் நுழைந்து தற்கொலைத் தாக்குதல் நடாத்திய ஜமீல் முகமது அப்துல் லத்தீப் எனும் நபர், சிரியாவில் 3-6 மாதங்கள் ஐ.எஸ். அமைப்பிடம் பயிற்சி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஐக்கிய இராச்சியம் மற்றும் அவுஸ்திரேலியாவில் உயர் கல்வி கற்ற குறித்த நபர், 2014ம் ஆண்டு சிரியாவின் ரக்கா பகுதிக்கு சென்று பயிற்சி பெற்றுள்ளதுடன் ஐ.எஸ்ஸுக்கு ஆள் சேர்க்கும் முக்கிய பிரதானிகளான ஜிஹாதி ஜோன் மற்றும் அவுஸ்திரேலியாவின் நீல் பிரகாஷ் ஆகியோருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்ததாகவும் அவுஸ்திரேலியாவில் வைத்தே தீவிரவாத சிந்தனைக்குள்ளாகி அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல்களை நடாத்த வேண்டும் என நெருங்கிய நண்பர்களிடம் தெரிவித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சஹ்ரான் தலைமையில் தாக்குதல் திட்டம் வகுக்கப்பட்ட போதிலும் இரு அணிகளாக தீவிரவாத குழுக்கள் இயங்கியுள்ளதுடன் இலக்குகளைத் தமக்குள் பகிர்ந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment