2012ம் ஆண்டு அதிவேக நெடுஞ்சாலையில் பொலிசார் தமது கடமையைச் செய்ய விடமாமல் இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலான ஞானசாரவின் வழக்கு விசாரணை இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
எனினும், சந்தேக நபரான ஞானசார வழக்குக்கு சமூகமளிக்காத நிலையில் வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பொது மன்னிப்பில் விடுதலை பெற்று வந்த ஞானசார மறுநாள் ஏகத்துக்கும் கர்ஜித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனாலேயே இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு செல்லவில்லையெனவும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
பூனையும் எலியும் விளையாட்டு தொடர்கிறது இலங்கையென்னும் பீ நாட்டில் அங்கே சட்டம் ஒழுங்கு எல்லாம் பாமரமக்களுக்கு மட்டும் தான்.
Post a Comment