அளுத்கம, தர்கா நகரில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புகளைப் பேணி வந்த சந்தேகத்தில் கைதான நபருக்கு இந்தியா, குஜராத் பகுதியில் தீவிரவாத குழுவொன்றுடன் தொடர்பிருந்தமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தன்னை ஒரு முன்னாள் விசேட அதிரடிப்படை உறுப்பினர் எனவும், ஆயுதப் பயிற்சி பெற்றவர் எனவும் மறு முனையில் உள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டுள்ள ஆதில் எனும் குறித்த நபர், ஏலவே ஐ.எஸ் அமைப்புடனான தொடர்புகளின் பின்னணியில் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தாக்குதல் ஒன்றைத் திட்டமிட்ட குழுவினருடன் மூன்று வருடங்களுக்கு முன்னராக இந்நபர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதுடன் அங்கு, பொலிசாரின் அறிக்கையில் ஆதிலின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment