தர்கா நகரைச் சேர்ந்தவர்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றம் நிமித்தம் கடந்த மூன்று வருடங்களாக இயங்கி வந்ததாகக் கருதப்படும் வட்ஸ்அப் குழுமம் ஒன்றை உருவாக்கிய நபர் மற்றும் மேலும் இருவர் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகளின் பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இனங்களுக்கிடையில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஐ.எஸ். அமைப்போடு தொடர்பிலுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு அண்மையில் தர்கா நகர் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தமையும் பல இடங்களில் 'காட்டிக்கொடுப்புகள்' நிகழ்ந்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment