இனவாத வன்முறையத் தூண்டி ஐக்கியத்தைக் குழப்பும் வகையில் நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்ட அமித் வீரசிங்கவின் விளக்கமறியல் நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அமித்துக்கு எதிரான சாட்சியங்கள் நீதிமன்றில் கையளிக்கப்படாத நிலையில் அதற்கான அவகாசத்தை வழங்கும் பொருட்டே இவ்வாறு 29ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
திகன வன்முறையினைத் தூண்டிய அமித் வீரசிங்க சிறையிலிருந்து மீண்ட பின்னர் இம்மாதம் 12-13ம் திகதிகளில் அரங்கேற்றப்பட்ட வன்முறைகளில் தொடர்புபட்டுள்ளதாக கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment