மினுவங்கொட பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல் மற்றும் வீடுகளுக்கு சேதம் விளைவித்ததன் பின்னணியில் கைது செய்யப்பட்டிருந்த 32 சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
தலா ஒரு லட்ச ரூபா சரீரப்பிணையில் சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28ம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்பகுதியில் வன்முறையைத் தூண்டிவிட்டதாகக் கருதப்படும் மது மாதவ தற்போது தலைமறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment