ஈஸ்டர் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளின் பின்னணியில் பல நாடுகள் தமது நாட்டுப் பிரஜைகள் இலங்கை செவ்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், சீனா பிரயாணத்தடையை நீக்கியுள்ளதுடன் இலங்கைக்கான சுற்றுலாப் பயணத்தை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தையும் மீள ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க, சீன தூதரை இது தொடர்பில் சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்னரே இவ்வாறு தடை நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment