பொது, மற்றும் தனியார் நிறுவனங்களில் அரபு மொழியில் வைக்கப்பட்டிருக்கும் பெயர்ப் பலகைகளை நீக்குவதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் வஜிர அபேவர்தன.
இது தொடர்பில் சகல பொது சேவை நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்படவுள்ள அதேவேளை, இனி மேல் வீதிகளில் காட்சிப்படுத்தப்படும் எந்தவொரு பெயர்ப்பலகையாயினும் அது சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பெரும்பாலான முஸ்லிம்கள் அல்-குர்ஆனை ஓதும் நிமித்தம் அரபு மொழியை வாசிப்பதற்கே கற்றுக்கொள்கின்ற அதேவேளை, மேலதிக மார்க்கக் கல்வியை முன்னெடுப்பவர்களே அரபை ஒரு மொழியாக கற்றுக்கொள்கின்றமையும் பெரும்பாலான அரபுக் கலாசாலைகளின் பெயர்கள் அரபு மொழியிலும் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment