பாகிஸ்தான், பலுகிஸ்தான் பிராந்தியத்தில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிராந்திய தீவிரவாத குழுவொன்று நடாத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ள அதேவேளை நான்கு தாக்குதல்தாரிகளும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலுகிஸ்தான் விடுதலை இயக்கம் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளதுடன் பிராந்தியத்தில் சீன முதலீடு மக்களுக்கு நன்மையற்றது எனவும் விளக்கமளித்துள்ளது.
தீவிரவாதிகளை தடுக்க முனைந்த காவலாளியே கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment