சம்மாந்துறை கோயில் வாளகத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு - sonakar.com

Post Top Ad

Sunday, 5 May 2019

சம்மாந்துறை கோயில் வாளகத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு


நேற்று (4) மாலை 5 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வளாக வாழை தோட்டம் ஒன்றில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ரவை கூடு ஒன்று, ரம்போ கோடாரி, மற்றும் வாள் ஒன்று பொலித்தீன் உறை ஒன்றில் இடப்பட்டு உரப்பை ஒன்றில் போடப்பட்டு காணப்பட்டது.


இதன் போது கோவில் பராமரிப்பாளர் வழங்கிய தகவலுக்கு அமைய ஆலய பரிபாலன தலைவர் சம்மாந்துறை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவு சோதனை மேற்கொண்டது.

இச்சோதனையின் போது உரப்பையில் காணப்பட்ட ரவைகூடு கோடரி வாள் என்பன மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment