இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற திட்ட வன்முறைகளைக் கண்டித்து சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்கள் சார்பில் இன்றைய தினம் ஜெனிவா, ஐ.நா முன்னால் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில், ஐக்கிய இராச்சியம் - பிரான்ஸ் - இத்தாலி போன்ற இடங்களிலிருந்தும் சென்று ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இனவாத அமைப்புகளைக் கைது செய்து, இனவாதிகளைத் தண்டிப்பதோடு சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கக் கோரும் கோசங்கள் இங்கு எழுப்பப்பட்டுடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment