ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என அரசியல் மட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை நிராகரித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
பதவி விலகுவதன் மூலம் பயங்கரவாதத்தை வெல்லவிடப் போவதில்லையெனவும் நிலவரத்தை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்போவதாகவும் ஜனாதிபதி தெரிவிக்கிறார்.
அம்பாறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்தே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ள அதேவேளை மஹிந்த தரப்பினர் அரசு பதவி விலக வேண்டும் என தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment