வல்லரசுகளின் விளையாட்டு மைதானமாக மாறி வரும் இலங்கையில் மீண்டும் வெடிகுண்டு அச்சம் பரவலாக உருவாகியுள்ள நிலையில், சீனா சென்ற ஜனாதிபதியிடம் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் விசேட கருவிகளை வழங்குவதாக வாக்குறுதியளித்துள்ளது சீனா.
பொலிசாரின் உபயோகத்திற்கென 100 நவீன ஜீப் வண்டிகள் ஏலவே வழங்கப்பட்டுள்ளதோடு 2600 மில்லியன் ரூபா நிதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவிடமிருந்து மேலதிக பாதுகாப்பு உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்றில் இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சுகளும் கைச்சாத்திட்டுள்ளதாக அறியமுடிகிறது.
உலக பொருளாதாரத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், சீனாவின் பட்டுப்பாதை திட்டத்துக்கு எதிரான மேற்குலகின் மறைமுக நடவடிக்கைகளும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை பாதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment