ஈஸ்டர் தாக்குதல் பற்றி 'சவுதிக்கும்' முன் கூட்டியே தெரியும்? - sonakar.com

Post Top Ad

Sunday, 5 May 2019

ஈஸ்டர் தாக்குதல் பற்றி 'சவுதிக்கும்' முன் கூட்டியே தெரியும்?


ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் பற்றி இந்தியாவையடுத்து சவுதி அரேபியாவுக்கும் முன் கூட்டியே தெரியும் என லிபிய செய்தி நிறுவனம் ஆதாரம் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான சவுதி தூதருக்கு சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரினால் அனுப்பப்பட்ட கடிதத்தினை அடிப்படையாக வைத்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




குறித்த கடிதத்தில், ஈஸ்டர் தினத்தில் சவுதி அரேபியா தூதரக அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதைத் தவிர்க்குமாறும் குறிப்பாக தேவாலயங்கள் பற்றி அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் தூதரக அதிகாரிகள் வெளியில் செல்வதைத் தடுப்பதோடு உள்ளூர் அமைப்புகள், தனி நபர்களுடனான தொடர்பாடல்கள் ஆவணங்களை கணிணியிலிருந்தும் அழித்துவிடும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய புலனாய்வுத்துறை ஆறு மாதங்களாகவே இலங்கையை எச்சரித்து வந்ததாக தெரிவிப்பதுடன் தாக்குதல் எச்சரிக்கை பற்றி ஜனாதிபதிக்கும் முன்கூட்டியே தெரியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இத்தாக்குதல் பற்றி தாம் அறிந்திருக்கவில்லையென அமெரிக்கா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment