மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலியினால் தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நீதிபதி ஒருவர் பற்றி வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ள நீதியமைச்சர் தலதா அத்துகோறள, இது குறித்த தகவலை தமக்கு நேரடியாகவோ அல்லது பிரதம நீதியரசரிடமோ தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதிபதிகள் பற்றி வெளியில் பேசுவது அனைத்து நீதிபதிகளையும் சங்கடத்துக்குள்ளாக்கக்கூடியது எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
எனினும், குறித்த விவகாரத்தினை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்போவதாக ஆளுனர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment