கடந்த சில தினங்களாக முஸ்லிம்களுக்க எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த திட்டமிட்ட வன்முறைகள் பற்றி, இலங்கை முஸ்லிம்கள் அரபு நாட்டு ஊடகங்களுக்கு, குறிப்பாக அல்ஜசீராவுக்கு வழங்கியது தேசத் துரோகம் என 'தேசப்பற்றாளர்கள்' எனும் போர்வையில் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
நாட்டின் பாதுகாப்பு படையினரும் சேர்ந்தே தாக்குதல்களுக்கு அனுசரணை வழங்கியிருந்ததோடு முஸ்லிம் அரசியல்வாதிகளும் தற்காலிகமாக காணாமல் போயிருந்த நிலையில், சர்வதேச ஊடகங்களுக்கும், ராஜதந்திரிகளுக்கும் விடயங்களை தெரியப்படுத்துவதற்கு பல கோணங்களில் முயற்சிகள் இடம்பெற்றிருந்தது.
இதில் ஒரு பகுதியாக அல்ஜசீரா போன்ற தொலைக்காட்சிகளுக்கு இலங்கை முஸ்லிம்கள் 'இவ்வாறான' நேரத்தில் தகவல் வழங்கியது தவறென புதிய பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment