ஈஸ்டர் தினத்தன்று தாக்குதலுக்குள்ளான நீர்கொழும்பு, கட்டுவாபிட்டிய சென் செபஸ்தியன் தேவாலயத்தில் நேற்றிரவு வழிபாடுகளை ஆரம்பித்து வைத்துள்ளார் கார்டினல் மெல்கம் ரஞ்சித்.
தாக்குதலையடுத்து பிரதேசத்தில் சிறு பதற்றமும் அச்சமும் நிலவி வந்த சூழலில் ஐந்து தினங்களுக்கு முன்பாக அப்பகுதியில் இனவிரோத நடவடிக்கைகளும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், நேற்றிரவு வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பிரதேசம் வழமைக்குத் திரும்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment