முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குப் பயந்தே இலங்கையில் அரசாங்கம் இயங்கிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார் அத்துராலியே ரதன தேரர்.
ஜே.ஆர். ஜயவர்தன உருவாக்கிய அரசியலமைப்பின் ஊடாகவே சிறுபான்மை அரசியல் கட்சிகள் இவ்வாறு பயன்பெறுவதாகவும் குறிப்பாக முஸ்லிம் அரசியல் கட்சிகள், எந்த ஆட்சி நடந்தாலும் அந்தப் பக்கம் தாவி அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்வதன் மூலம் அரசுகளை கட்டுப்படுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இதேவேளை இலங்கையில் முஸ்லிம்கள் மத்தியில் தீவிரவாத குழுக்கள் 2013 முதல் இயங்கி வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment