தனது தொகுதியான ஹெட்டிபொலயில் வன்முறைகள் இடம்பெறுவதற்கு பொலிசாரே காரணம் என தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர.
பிங்கிரிய பகுதியில் கைது செய்யப்பட்ட வன்முறையாளர்களை ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தது தவறெனவும் அதனூடாக தமது தொகுதியில் வன்முறைகள் இடம்பெறுவதைத் தவிர்க்கவே அங்கிருந்து சந்தேக நபர்களை பிங்கிரியவுக்கு கொண்டு செல்லத் தான் தலையிட்டதாகவும் தயாசிறி தெரிவிக்கிறார்.
அம்பாறையைச் சேர்ந்த நாமல் குமார, அங்கு காணப்பட்டமை பிரதேசத்தில் சர்ச்சையை உருவாக்கும் என தான் முன்னெச்சரிக்கையாக நடந்து கொண்டதாகவும் எனினும், தான் பிங்கிரிய சென்று திரும்புவதற்குள் ஹெட்டிபொலயில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாகவும் சோனகர்.கொம் மேற்கொண்ட நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தயாசிறியுடனான நேர்காணல்:
No comments:
Post a Comment