நீர் கொழும்பு: வதந்தி பரவியதால் பெற்றோர் பதற்றம் - sonakar.com

Post Top Ad

Thursday, 30 May 2019

நீர் கொழும்பு: வதந்தி பரவியதால் பெற்றோர் பதற்றம்


நீர் கொழும்பு பகுதியில் பாடசாலைகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக வதந்திய பரவியையடுத்து பெற்றோர் பதற்றத்தில் தம் பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்துச் செல்ல முண்டியடித்த நிலை தோன்றியுள்ளது.



எனினும், அவ்வாறு எவ்வித அச்சுறுத்தலும் இல்லையென மேல் மாகாண கல்வித்திணைக்கள பிரதானி தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்புவதில் அச்ச சூழ்நிலை தொடர்கின்றமையும், விசமத்தனமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment