திட்டமிட்டபடி இரண்டாந் தவணை ஆரம்பம்: ஆளுனர் அசாத் - sonakar.com

Post Top Ad

Sunday, 5 May 2019

திட்டமிட்டபடி இரண்டாந் தவணை ஆரம்பம்: ஆளுனர் அசாத்


அனைத்து பாடசாலைகளும் திட்டமிட்டபடி இரண்டாந் தவணை கற்றல் நடவடிக்கைகளிற்காக எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என மேல் மாகாண ஆளுநர் எம். அசாத் எஸ் சாலி அறிவித்தார். 


பாடசாலையின் பாதுகாப்பு தொடர்பில் வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் படி அனைத்து வலயக்கல்விப் பணிப்பாளர்களிற்கும் அறிவுத்தல்கள் போதியளவு வழங்கப்பட்டுள்ளதாகவும்,  இப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் ஏற்படும் தவறுகளிற்கு வலயக்கல்விப் பணிப்பாளர்கள் பொறுப்புக் கூற கடமைப்பட்டிக்கின்றார்கள் எனவும் மேலும் குறிப்பிட்டார். 

பாடசாலைகளில் குறைந்தபட்சம் ஒரு இரவு நேரகாவலாளியையாவது நியமிக்குமாறு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேல் மாகாண ஆளுநர் பாதுகாப்புப்பிரிவினர்கள், மற்றும் சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளுடன் தொடர்புடைய சிரேஷ்ட மாகாணசபை உத்தியோகத்தர்களுடனான சந்திப்பொன்றை வியாழக்கிழமை ஏற்பாடுசெய்திருந்தார். 

இச் சந்திப்பின் போது ஊடகங்களிற்கு ஆளுநர் கருத்து தெரிவிக்கும் போது விடுமுறையின் பின்னர் கற்றல் நடவடிக்கைகளுக்காக வருகை தரும் மாணவர்களிற்கு தடையற்ற போக்குவரத்தை உறுதிப்படுத்துமாறு அனைத்து பாடசாலைகளிற்கும் பல்கலைக்கழகங்களிற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 

மாணவர்களை பாடசாலைகளிற்கு அழைத்துவரும் வாகனங்கள் முப்பது நிமிடங்களிற்குள் மாணவர்களை பாடசாலையினுள் இறக்கிவிட வேண்டும் எனவும், பாடசாலை முடிவுற்ற பின்னரும் இதே முறையில் அவர்களை அழைத்துச் செல்வதும் அவசியம் எனவும், இதற்கு பெற்றோர்களினதும், வாகன ஓட்டிகளினதும் ஒத்துழைப்பு அவசியம் எனவும், இது தொடர்பான முறையான வழிகாட்டல் பொலிசாரிற்கும், வீதிப் போக்குவரத்துப் பரிவினருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 

-Rasooldeen

No comments:

Post a Comment