ஹசலக பகுதியில், பௌத்தர்களின் தர்மசக்கரம் படம் பொறித்த ஆடை அணிந்து வீதியில் சென்றதன் மூலம் பௌத்தத்தை இழிவு படுத்தியதாக கூறி 47 வயது மசாஹிமா என அறியப்படும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரது விளக்கமறியல் ஜுன் 3ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த ஆடையில் பொறிக்கப்பட்டிருப்பது தர்மசக்கரம் தானா? என உறுதிப்படுத்துமாறு பௌத்த சமய விவகார அமைச்சுக்கு குறித்த ஆடையின் மாதிரி அனுப்பப்பட்டுள்ளதாக பொலிசார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
கப்பல்களில் காணப்படும் செலுத்தியின் அடையாளம் பொறித்த இவ்வகை ஆடைகள் பரவலாக சர்வதேச அளவில் பயன்படுத்தப்படுகின்ற அதேவேளை தனது மனைவி இவ்வாடையை ஒன்றரை வருடங்களுக்கு முன் கொள்வனவு செய்ததாக குறித்த பெண்ணின் கணவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment