அல்-குர்ஆனா பற்றி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் தினசரி தொலைக்காட்சிகள் ஊடாக ஐந்து நிமிட நிகழ்ச்சிகளாகவாவது ஒளிபரப்பப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார் பேராசிரியர் அத்தநாயக்க எம். ஹேரத்.
அல்-குர்ஆனைப் பற்றித் தெரிந்து கொள்ளாததனாலேயே பெரும்பாலானோருக்கு ச்நதேகம் இருப்பதாகவும் மௌலவி மார் அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கத்தோலிக்கர்கள், முஸ்லிம்கள் தொலைக்காட்சிகளில் பௌத்த போதனைகளை செவியுறும் போது அல்-குர்ஆனை பற்றிய விளக்கங்களையும் ஏனையோரும் செவியுறுவதில் தவறில்லையெனவும் அதற்கேற்ப நிகழ்ச்சிகள் நடாத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். சுவர்ணவாஹினி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment