ஈஸ்டர் தாக்குதல்கள் குறித் போதியளவு உளவுத்தகவல்கள் வழங்கப்பட்டும் இலங்கை அரசு அலட்சியமாக செயற்பட்டுள்ளமை குறித்து தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்தியாவின் முக்கிய உளவு நிறுவனமான தேசிய உளவு முகவர் நிறுவனம் தனது பிரதிநிதிகளை இலங்கை அனுப்பி வைக்கவுள்ளது.
நிறுவன பணிப்பாளர் வை.சி. மோடி தலைமையில் இக்குழு இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கையிலிருந்து ஐ.எஸ். தொடர்புள்ள தீவிரவாதிகள் இந்திய கரையோரப் பகுதிகளுக்கு தப்பிச் சென்று விடக்கூடாது என அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment