ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதி: கோட்டாபே - sonakar.com

Post Top Ad

Sunday 19 May 2019

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதி: கோட்டாபே


தான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதியென தெரிவித்துள்ளார் கோட்டாபே ராஜபக்ச.



ஈஸ்டர் தாக்குதல்களால் நாட்டின் பாதுகாப்பு வீழ்ச்சியடைந்து விட்டுள்ளதாகவும் பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கி விட்டதாகவும் தெரிவித்துள்ள அவர், இதனால் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளதாக தெரிவிக்கிறார்.

இதேவேளை, தேர்தலை தாமதப்படுத்தி காபந்து அரசொன்றை அமைத்து இழுத்தடிப்பதற்கே மைத்ரி தரப்பு முயல்வதாக பவித்ரா வன்னியாராச்சி லண்டனில் வைத்து குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

ஜெயபாலன் said...

ஓ உண்மையாகவா திரு கோ.ரா, தயவு செய்து நீங்கள் எனக்காக 2013 நவம்ப்பரில் அனுப்பிய வெள்ளைவானை மீண்டும் அனுப்புங்கள். வாக்களிக்க வருகிறேன்.

Post a Comment