சிலாபம் நகர்ப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையையடுத்து அங்கு நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் தாக்குதல் நடாத்தப்படக்கூடும் என முகப்புத்தகத்தில் வெளியான தகவல் ஒன்றையடுத்து நகர்ப்பகுதியில் கூடிய பொதுமக்களால் அங்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை அங்கு தவ்ஹீத் ஜமாத் மையம் ஒன்றும் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
கூட்டத்தைக் கலைக்க இராணுவத்தினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment