ஈஸ்டர் தாக்குதலையடுத்து எல்லோருக்கும் ஜனாதிபதியாகும் கனவு வந்து விட்டது என தெரிவிக்கிறார் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க.
வெயங்கொடயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து செய்தியாளர் ஒருவர், உங்களுக்கு ஜனாதிபதியாகும் எண்ணம் ஏற்பட்டுள்ளதா? என வினவிய போதே இவ்வாறு தெரிவித்த அவர், ஜனாதிபதி - பிரதமர் பொறுப்புகளைக் கனவு காண்பதை விடுத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என பதிலளித்துள்ளார் அர்ஜுன.
நாடு எதிர்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமே தவிர ஜனாதிபதி பதவியைக் கனவு கண்டுகொண்டிருக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment