கோட்டாபே ராஜபக்சவின் நெருங்கிய சகாவாக தன்னை அடையாளம் காட்டும் அதேவேளை, புர்கா மற்றும் முஸ்லிம் கலாச்சார ஆடைகளுக்கு எதிராக கருத்துரைத்து வரும் மது மாதவ, நேற்றிரவு மினுவங்கொடயில் காணப்பட்டதாக வெளியான படம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
குறித்த நபரது உத்தியோகபூர்வ பேஸ்புக் புத்தகத்தில் இது குறித்து ஜனநாயகத்தை விரும்பும் சிங்கள இளைஞர்கள் சுட்டிக்காட்டியுள்ள போதிலும் மது மாதவ இதுவரை (இச்செய்தி எழுதப்படும் வரை) பதிலளிக்கவில்லை.
இந்நிலையில், தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதை உறுதி செய்யும் வகையில் மஹிந்த ஆதரவு பௌத்த துறவிகளும் ஆங்காங்கு உணர்ச்சியூட்டும் வகையில் உரையாற்றும் காணொளிகள் வெளியாகியுள்ளன.
2018 திகன வன்முறையையடுத்து லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அங்கு வைத்து திகன வன்முறைகளின் சூத்திரதாரி திலும் அமுனுகமவென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment