சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ள ஞானசார, தனது தாயாருடன் சென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நேரில் சந்தித்துள்ளார்.
இதன் போது ஞானசாரவின் தாயார், தனது புதல்வனுக்கு பொது மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக இன வெறுப்பூட்டல் மற்றும் கடும்போக்குவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஞானசார, நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் ஆறு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை பெற்றிருந்த நிலையில் அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment