வெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் செயலாளர் ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒழுங்கு செய்யப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட பொலிஸ் பிரிவே இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளதோடு ஞானசார மீது மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டியுள்ளது.
எனினும், ஞானசார சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி திரந்த வலலியத்த இவ்வழக்கைக் கைவிடுமாறு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில் ஜுன் 7ம் திகதி விசாரணை இடம்பெறவுள்ளது.
No comments:
Post a Comment