நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கவனத்திற் கொண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களுக்கு பின்வரும் வழிகாட்டல்களை வழங்க விரும்புகின்றது.
ரமழானின் இறுதிப் பத்தில் நல்லமல்களில் முனைப்புடன் ஈடுபடுமாறும் நாட்டின் நிலைமை சீராக துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் வேண்டுகிறோம்.
ரமழானில் எஞ்சியுள்ள நாட்களில் தத்தமது மஸ்ஜித் மற்றும் பிரதேசங்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மஸ்ஜித் நிர்வாகிகளும் ஊர் முக்கியஸ்தர்களும் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இரவு நேரங்களில் விளையாட்டுக்களில் ஈடுபடுவதையும் பிறருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதையும் முற்றாக தவிர்க்கவும்.
ஒற்றைப்படை இரவில் குறிப்பாக 27ஆம் நாள் இரவு வணக்க வழிபாடுகளை ஏற்பாடு செய்யும்போது அவ்வப் பிரதேச நிலைமைகளைக் கவனத்திற் கொண்டு குறுகிய நேரத்தில் அமல்களை முடித்துக் கொள்ள ஆவன செய்யவும்.
இரவுத் தொழுகை தொழுவதற்கு ஆரோக்கியமான சூழல் இருக்கும் பகுதிகளில் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் உதவியுடன் தொழுது கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
இஃதிகாப் இருப்பவர்கள் தத்தமது பிரதேச நிலைமைகளைக் கவனத்திற் கொள்வதோடு அப்பிரதேச பொலிஸ் நிலைய அனுமதியையும் பெற்றுக் கொள்ளவும்.
ஆரோக்கியமற்ற நிலை நிலவும் ஊர்களில் இஃதிகாப் இருப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்குகின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எமது ரமழான் கால வணக்க வழிபாடுகளையும் நற்காரியங்களையும் ஏற்று அங்கீகரித்து நமது நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் மலரச் செய்வானாக!
வஸ்ஸலாம்.
அஷ்-ஷைக் எச். உமர்தீன்
செயலாளர் - பிரச்சாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
No comments:
Post a Comment