எஞ்சியிருக்கும் தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினரிடம் சரணடையுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் பாதுகாப்பு படையினரின் பாரிய கெடுபிடிகளை முஸ்லிம் சமூகம் சந்தித்து வருகிறது. இந்நிலையிலேயே ஜம்மியத்துல் உலமா சார்பில் இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னராக அரசாங்கமே இக்காலக் கெடுவை வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இவ்வேண்டுகோளை விடுத்துள்ளது.
இதற்கிடையில் நேற்றிரவு நீர்கொழும்பில் முஸ்லிம்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதோடு பாரிய பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment