சரத் பொன்சேகாவை சட்ட-ஒழுங்கு அமைச்சராக்கும் படி கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் 98 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மனுவொன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக அக்கட்சி சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் சட்ட-ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் சிறுபான்மை மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். ஈஸ்டர் தாக்குதலையடுத்து முஸ்லிம் சமூகம் அரசுக்கும் பாதுகாப்பு தரப்புக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கி வந்த போதிலும் தொடர்ச்சியாக முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்கப்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
அடக்குமுறையின் வடிவமாகவே இச்செயற்பாடுகள் கருதப்படுகின்ற அதேவேளை, அரச உயர் மட்டம் தொடர்ந்தும் மௌனித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment