ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில், சந்தேகத்துக்கிடமான பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஸ்ரீஜயவர்தனபுர மாநகர சபை உறுப்பினர் அலி உஸ்மான் மற்றும் அவரது சகோதரரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதியளித்துள்ளது நீதிமன்றம்.
வெலிகடை பொலிசாரின் வேண்டுகோளை ஏற்று நீதிமன்றம் இவ்வனுமதியை வழங்கியுள்ளது.
குறித்த நபர்கள் ஐ.எஸ். சார்பான விடயங்கள் வைத்தருந்ததாகவும், இராணுவ சீருடை மற்றும் கூரிய ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment