சிலாபம் முதல் குளியாபிட்டி வரை பல இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகத் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் 78 பேரைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளதாக தெரிவிக்கிறது ஸ்ரீலங்கா பொலிஸ்.
குருநாகல், சிலாபம், நிக்வரட்டிய, குளியாபிட்டிய ஆகிய பல இடங்களில் இருந்து இவ்வாறு 78 பேரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பெரும்பாலான இடங்களில் வன்முறையாளர்களுக்கு பாதுகாப்பு தரப்பு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதுடன் வன்முறையாளர்களின் தாக்குதலில் சிக்கிக் கொண்ட பொலிசாருக்கு அவர்களே உதவிகளை செய்தது மற்றும் பாதுகாப்பு தரப்பிடமிருந்து கைமாறு கிடைத்ததற்கான காணொளிகளும் பரவலாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment