ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களைக் காரணங்காட்டி, வாய்ப்புக்காக காத்திருந்த பேரினவாதிகள் கடந்த இரு நாட்களாக சிலாபம், குருநாகல் மற்றும் மினுவங்கொட பகுதியில் கட்டவிழ்த்துள்ள இன வன்முறைக்கு 45 வயது முஸ்லிம் நபர் பலியாகியுள்ளார்.
வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இதுவே அண்மைய வன்முறைகளில் பதிவாகியுள்ள முதலாவது உயிரிழப்பாகும்.
உயிரிழந்தவரின் பெயர் பௌசுல் ஹமீட் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment