சிலாபம் நகரில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் காலை 6 மணி வரை இருந்த ஊரடங்கை 4 மணிவரையாக குறைத்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பேஸ்புக்கில் முஸ்லிம் நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட பதிவொன்றினை தவறான வகையில் சிங்களத்தில் மொழிபெயர்த்ததன் விளைவிலேயே இன்றைய அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதாக இதுவரை நம்பப்படுகின்ற போதிலும் ஆகக்குறைந்தது மூன்று பள்ளிவாசல்கள் மீது கல்வீச்சு நடாத்தப்பட்டுள்ளதுடன் தவ்ஹீத் அமைப்பொன்றுடன் இணைந்து செயற்பட்ட நபரின் வர்த்தக நிலையமும் தாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஊரடங்கு 4 மணியுடன் நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment