டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் கைதான பாதாள உலக பேர்வழி கஞ்சிபானை இம்ரானை 90 நாட்கள் தடுத்து வைக்க பாதுகாப்பு செயலாளரின் அனுமதி பெற்றுள்ள நிலையில் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர் பொலிசார்.
இவ்விபரம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் குறித்த நபரை ஜுன் 12ம் திகதி நீதிமன்றம் அழைத்து வருமாறு உத்தரவிட்டுள்ளது கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம்.
இந்நிலையில் குறித்த நபருக்கு எதிராக 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் மன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment