ஈஸ்டர் தாக்குதலையடுத்து தடாலடியாக முஸ்லிம் சமூகம் மீது பாரிய அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வரும் அதேவேளை குற்ற உணர்வுடன் சமூகமும் முடங்கிப் போயுள்ளது.
இந்நிலையில், முஸ்லிம் புத்திஜீவிகள் - ஆன்மீகத் தலைமைகள் இரு அணிகளாகப் பிரிந்து கருத்து வேறுபாடு கொண்டு தீர்மானிக்க முடியாமல், நீண்ட கால இழுபறிக்குள்ளாகியிருந்த முஸ்லிம் தனியார் சட்ட விவகாரத்தில தலையிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பொதுச் சட்டத்துக்கமைவாக முஸ்லிம் பெண்களுக்கான விவாக வயதும் 18 ஆக மாற்றப்படுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்களுக்கு பிரதமர் தரப்பிலிருந்து அறிவிப்பு அனுப்புப்பட்டுள்ளதுடன் அந்த நாடுகளிலிருந்து விவாக நோக்கில் இலங்கை வருபவர்களுக்கு இது தொடர்பிலான அறிவுறுத்தல்களை வழங்குமாறும் வேண்டப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
சுமார் 9 வருடங்களாக இவ்விவகாரத்தில் முஸ்லிம் தலைமைகள் இணக்கப்பாட்டிற்கு வர முடியாமல் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டு வந்தமையும் தற்போதைய சூழலில் முஸ்லிம்களின் சலுகைகள் மீது சுதந்திரமான அழுத்தம் காணப்படுவதுடன் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமது வீடுகளில் சோதனையிடப்பட்ட அதிர்ச்சியில் வாய் மூடி மௌனித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment