மினுவங்கொட வன்முறையில் சேதப்படுத்தப்பட்டுள்ள பள்ளிவாசலின் திருத்தப் பணிகளை மேற்கொள்ள உடனடியாக 1.5 மில்லியன் ரூபா இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி.
இன்றைய தினம் குறித்த பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடச் சென்றிருந்த ஆளுனர், பள்ளிவாசலை தொடர்ந்து பயன்படுத்தாதிருப்பது கவலைக்குரிய விடயம் என தெரிவித்ததுடன் உடனடியாக திருத்தப் பணிகளை மேற்கொண்டு வழிபாடுகளை மீள ஆரம்பிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில், அரசாங்கம் வந்து பார்வையிட்டு இழப்பீடு தரும் வரை காத்திருப்பது மேலதிக தாமதத்தை உருவாக்கும் என விளக்கிய ஆளுனர், உடனடியாக இது தொடர்பில் உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளதோடு காசோலையை நாளைய தினம் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
இவையெல்லாத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடமே அவ்வாறு செய்யாமல் அதை நாசமாக்கி பின் முஸ்லிம்களின் பணத்தில் மீண்டும் புனரமைப்பு செய்வது வேடிக்கையான விஷயமே எனவே முழு நஷ்டஈடும் அரசாங்கத்தின் நிதியிலே செலவு செய்ய வேண்டும்.
Post a Comment