ஈஸ்டர் தாக்குதலையடுத்து இடம்பெற்ற நாடளாவிய சோதனை நடவடிக்கைகள் ஊடாக நூற்றுக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையில் 12 முக்கிய பயங்கரவாதிகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
தீவிரவாதிகளால் பயன்படுத்தப்பட்ட 13 வீடுகள், 41 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் ரொக்கம் மற்றும் பல பில்லியன்கள் பெறுமதியான சொத்துக்கள் உள்ளடங்குவதாக நேற்றைய தினம் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
தற்போதைய சூழ்நிலையில் 150 பேர் வரையே தீவிரவாத குழுவில் இருப்பதாகவும் முன்னர் தமிழ் சமூகத்தின் மீது சந்தேகப் பார்வை கொண்டு பாரிய தவறிழைத்தது போன்று முஸ்லிம் சமூகத்தையும் ஒதுக்க முனைந்து மீளவும் தவறிழைக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment