ஜே.வி.பி - மஹிந்த ராஜபக்ச இடையிலான சந்திப்பு இன்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இச்சந்திப்பு குறித்து விளக்கமளித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.
எதிர்க்கட்சித் தலைவர் எனும் அடிப்படையில், எதிர்க்கட்சிகள் தம்மோடு பேச வேண்டுகோள் விடுத்தால் அதனை ஏற்றுக் கொள்வது தமது கடமையெனவும் அந்த வகையிலேயே ஜே.வி.பியின் வேண்டுகோளுக்கு மரியாதை கொடுத்து இன்றைய சந்திப்பு இணங்கியதாகவும் இதே போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைத்தாலும் நாட்டு நலன் குறித்து பேசத் தயார் என அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய சந்திப்பில் வாசுதேவ மற்றும் தினேஸ் குணவர்தனவும் கலந்துகொள்ளவுள்ளதாக பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment