
மஹிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்திய மக்கள் விடுதலை முன்னணியினர் நாளை தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கும் வகையிலான 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தேடும் நிமித்தமே இச்சந்திப்புகள் இடம்பெறுவதாக ஜே.வி.பி தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது.
மஹிந்தவுடனான சந்திப்பு தமக்குத் திருப்தியளித்திருந்ததாக அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்த நிலையில் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நாளை மாலை கலந்துரையாடல் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment