போதைப் பொருள் மன்னன் மாகந்துரே மதுஷ் தனக்கென பிரத்யேகமான படையணியொன்றை இயக்கி வந்துள்ள விபரங்கள் வெளியாகி வருவதோடு கைதுகளும் இடம்பெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியில் மதுஷின் தகவல் தொழிநுட்ப இணைப்பாளராக பணியாற்றி வந்த ரெமா என அறியப்படும் ரெமல் எனும் நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த நபரே மதுஷுக்கு தகவல் தொழிநுட்ப விடயங்களில் உதவுவதோடு மதுஷின் தந்தையின் இறுதிச் சடங்கை இணையம் ஊடாக நேரடி ஒளிபரப்பும் செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
7 பில்லியன் இரத்தினக் கல் கொள்ளை, தெவிநுவர 128 கிலோ போதைப் பொருள் கடத்தல் என பல்வேறு முக்கிய விடயங்களை தகவல் தொழிநுட்ப உதவியுடனேயே மதுஷ் டுபாயிலிருந்து கண்காணித்து இயக்கியுள்ளதாகவும் அதற்கான முழு ஏற்பாட்டையும் ரெமாவே செய்து கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment