பேஸ்புக் ஊடாக மாத்தறை, பொல்ஹேன பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட கேளிக்கை நிகழ்வொன்றில் போதைப் பொருள் உபயோகித்த குற்றச்சாட்டில் சிங்கள மொழி நடிகை ஒருவர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் வெளிநாட்டவர் உட்பட சுமார் 1500 பேர் கலந்து கொண்டுள்ளதாகவும் கொகைன் உட்பட பல்வேறு புது வகை போதை மாத்திரைகள் அங்கு உபயோகிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ஹிங்குராகொடயிலும் இவ்வாறு பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேளிக்கை நிகழ்வொன்றில் 89 பேர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment