புதிதாக திருமணமாகும் தம்பதிகளுக்கு பிரத்யேக வீட்டுக் கடன் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார் நிதியமைச்சர் மங்கள சமரவீர.
"ஹோம் ஸ்வீட் ஹோம்" என பெயரிட்டு அறிவிக்கப்பட்டுள்ள குறித்த கடன் திட்டம் 25 வருடங்களில் திருப்பிச் செலுத்தும் வகையில் புது மணத் தம்பதிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைய தலைமுறையினர் தமது திருமணத்திற்குப் பின்னான வாழ்க்கையை நம்பிக்கையுடன் முன்னெடுக்கும் நிமித்தம் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக நிதியமைச்சர் மேலும் விளக்கமளித்துள்ளார். எனினும், சீதனம் எனும் பெயரில் வீடு பெற்றுக்கொண்டே திருமணத்துக்கு இணங்கும் நடைமுறை தொடர்ந்தும் பெரும்பாலான இடங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment