
157 பயணிகளுடன் எத்தியோப்பியன் எயார்லைன்ஸ் விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளானதையடுத்து Boeing 737 Max ரக விமானத்துக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளன.

எத்தியோப்பியா, சீனாவைத் தொடர்ந்து தமது நாட்டுக்குள் குறித்த ரக விமானம் வருவதையும், அங்கிருந்து புறப்படுவதையும் தற்காலிகமாக தடை செய்துள்ளது சிங்கப்பூர்.
இந்தோனேசியா, தாய்லாந்து உட்பட பல நாடுகளில் விமானங்களைப் பயன்படுத்துவது தற்காலிகமாக தவிர்க்கப்பட்டுள்ள அதேவேளை இந்தியாவின் ஜெட் எயார்வேஸ், ப்ளை டுபாய் போன்ற சேவைகள் தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment